உள்ளடக்கத்துக்குச் செல்

செம்பழுப்பு மார்புப் பசையெடுப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Sitta|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
செம்பழுப்பு மார்புப் பசையெடுப்பான்
ஆண் உத்தராகண்டம், இந்தியா
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Sitta
இனம்:
இருசொற் பெயரீடு
Sitta cinnamoventris
பிளைத், 1842

செம்பழுப்பு மார்புப் பசையெடுப்பான் ( Chestnut-bellied nuthatch ) என்பது சிட்டிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை இனமாகும்.

இது இந்திய துணைக்கண்டத்தில் இந்தியா, திபெத்து வங்காளதேசம்,[1][2] பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

இது துணை வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல காடுகளிலும், வறண்ட அல்லது ஈரப்பதமான காடுகளிலும், மலை மற்றும் தாழ்நில காடுகளிலும் காணப்படுகிறது.

விளக்கம்

[தொகு]

இந்த இனம் பர்மிய பசையெடுப்பானை மிகவும் ஒத்திருக்கிறது, ஆனால் இது கனமான அலகைக் கொண்டுள்ளது. சிட்டுக்குருவியை விட சிறியதான இது சுமார் 15 செ.மீ. நீளம் இருக்கும். அலகு கொம்பு நிறமான கருப்பாகவும், விழிப்படலம் பழுப்பாகவும், கால்கள் ஈய நிறத்திலும் இருக்கும். உடலின் மேற்பகுதி நீலந்தோய்ந்த கருஞ்சாம்பல் நிறம். அலகடியிலிருந்து கண்கள் வழியாகப் பிடரிவரைக் கருங்கோடுகள் நீண்டிருக்கக் காணலாம். நடுவாலிறகுகள் இரண்டு நீலமாகவே காட்சியளிக்கும். கன்னங்களும் மோவாயும் வெண்மை. மார்பு, வயிறு, வாலடி ஆகியன நல்ல செம்பழுப்பாக இருக்கும்.

நடத்தை

[தொகு]

இவை தனித்தோ இணையாகவோ அடிமரங்களிலும், கிளைகளிலும் மரப்பட்டைகளிடையை காணப்படும் புழுபூச்சிகளை பிடித்து உண்ணும். பிற பறவைக் கூட்டங்களுடன் சேர்ந்து பூச்சிகளை வேட்டையாடுவதும் உண்டு.

தென்னிந்தியாவில் இவை மார்ச் முதல் சூலை வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இலை, கம்பளிநூல், பாசி முதலியவற்றைக் கொண்டு மரப்பொந்தில் கூடு அமைக்கிறது. இரண்டு முதல் ஐந்து வரையிலான முட்டைகளை இடுகிறது. முட்டை வெண்மையாக சிவப்புப் புள்ளிகளோடு காட்சியளிக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Harrap, Simon (March 4, 2020). "Chestnut-bellied Nuthatch (Sitta cinnamoventris)". Birds of the World. https://birdsoftheworld.org/bow/species/chbnut3/cur/introduction. 
  2. "Chestnut-bellied Nuthatch Sitta cinnamoventris".